Month: October 2016

மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்

மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள் 1. மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. 2. சுவாதிஷ்டானம்:- இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 3. மணிபூரகம்:- நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன. 4. அனாகதம்:- இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன. 5. விசுத்தி:- இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. 6. ஆக்கினை:- இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. 7. தூரியம்:- இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயருகள் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

Power of Mantras. Mantras are Frequencies that can Heal, Kill and Transcend..

Sanskrit is the oldest language that was based on sounds and vibrations.
Every alphabet and its pronounciation have specific meaning; like ku is earth, khE is sky etc. OM is the first and foremost of all mantras. OM is the sound of cosmic energy and contains all the sounds in itself. The spiritual efficacy of OM is heard, not by the ears but by the heart. It surcharges the innermost being of man with vibrations of the highest reality. All galaxies (including ours) are rotating and the sound they make is OM.
Frequency of OM is 7.83 Hz , which is inaudible to us as the human ear with it's 2 strand DNA cannot discern sounds of frequency less than 20 hertz.
Birds, Dogs and few other animals can hear it. OM has been adapted into other religions as AMEN, 786 ( OM symbol shown in mirror), SHALOM, OMKAR/ONKAR etc, but they do NOT work like the original OM.
While OM releases Nitric Oxide, Amen and Shalom only emit a sound. Frequencies of various Beej Mantras OM – 7.83 Hz
Gam – 14 Hz
Hleem – 20 Hz
Hreem – 26 Hz
Kleem – 33 Hz
Krowm – 39 Hz
Sreem – 45 Hz These cosmic sounds were heard by 12 strand DNA maharishis in their spiritual trances which broadened their sense spectrums. However our brain can register the vibrations. Seven Chakras and Mantras Muladhara (मूलाधार)
Base or Root Chakra: Cervix/Perineum
Sound Note: C
Colour: Red
Element: Earth
Mantra: Lam
Frequency in Hz: 261.6, 523.3, 1046.5, 2093, 4186
Keeps you Grounded. Connects your feet to the Earth. Good if you can’t make descisions. Swadhisthana (स्वाधिष्ठान)
Sacral Chakra: last bone in spine
Sound Note: D
Colour: Orange
Element: Water
Mantra: Vam
Frequency in Hz: 293.7, 587.3, 1174.7, 2349.3, 4698.7
Emotions, Passion, intuition and creativity. Manipura (मणिपूर)
Solar Plexus Chakra : Navel area
Sound Note: E
Colour: Yellow
Element: Fire
Mantra: Ram
Frequency in Hz: 329.6, 659.3, 1318.5, 2637.1, 5274.1
Confidence, Assertiveness, ability to take a stand and say No.
Will Power. Anahata (अनाहत)
Heart Chakra: Heart area
Sound Note: F
Colour: Green
Element: Wind
Mantra: Yam
Frequency in Hz: 349.2, 698.5, 1396.9, 2793.9, 5587.7
Love, Kindness, Compassion, Harmonious relationships. Visuddha (विशुद्ध)
Throat Chakra (throat and neck area)
Sound Note: G
Colour: Blue
Element: Sky
Mantra: Ham
Frequency in Hz: 196, 392, 784, 1568, 3136
Self-Expression and Open communication. Ajna (आज्ञा) Brow
Third Eye Chakra (pineal gland or third eye)
Sound Note: A
Colour: Indigo
Element: Body
Mantra: OM
Frequency in Hz: 110, 220, 440, 880, 1760, 3520. Insight and visualisation. Opens up your perceptive physic ability. Sahasrara (सहस्रार)
Crown Chakra (Top of the head; ‘Soft spot’ of a newborn)
Sound Note: B
Colour: White (combination of all the colours ) or Violet
Element: No Element
Mantra: No Sound
Frequency in Hz: 123.5, 246.9, 493.9, 987.8, 1975.5, 3951.1 Wisdom. Connecting you to your higher Self and spirituality.
Astral projection, Inter galactic travel, higher spiritual powers, timelessness, language of light etc. Advantages of natural production of Nitric Oxide in our body : The anuswaram (nasal sound) MMMM humming boosts the production of Nitric oxide in the body. This was known to Indians and documented more than 7000 years ago. Nadaswaram (Shehnai) is an ancient musical instrument which produces similar nasal sound. OM opens up quantum tunneling, where the wormholes do NOT have a restriction of speed of light. The secrets of this universe are contained in energy, frequency and vibration. If you make the sound of OM in front of a drop of liquid, it will transform itself into a Sri Yantra which is a very specific visual form, which is symmetrical and also holographic, in that every bit of it contains all of it. This Sri Yantra was revealed to Maharishis with 12 strand DNA and king sized pineal glands more than 8000 yrs BC. Sanskrit Mantras have the precise golden ratio of 1.618 sound harmonics ( Fibonacci) Om Sri Ram Jai Ram Jai Jai Ram

சித்தர் தரிசன மந்திரங்கள்

சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார்.

1.சித்தர் தரிசன மந்திரம்:-

ஓம் || கிலி  ரங் அங் சிங் ||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன் ,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும்யோக, ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது பரிபூரணம் 1000 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

2.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம கிலி ஓம்  |||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ  துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்  உண்டாவதுடன் தொழில் முறைகள் (வாத,வைத்தியம்), யோக ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது ஞான சைதன்யம் 51 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.


3.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம ஓம் கிலீம் ||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ  ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாகும்.சித்தர் பெருமக்கள் யாராவது காட்சி தருவார்கள் அச்சமயம் யார் வழியைப் பின்பற்றி அல்லது யார் நூலைப் பின்பற்றி இந்த முறையை அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள்.அப்பொழுது அகஸ்தியரின் நூலைப் பின்பற்றி இம்முறையை அறிந்தேன் அய்யா என்று மறுமொழி கூற வேண்டும்.

தெரிசிக்கத் தியானமொன்று சொல்லக்கேளாய் 
சிவயநம ஓம் க்லீம் என்று சேவி
வரிசிக்குஞ் சித்தரெல்லாம்  வெளியிற்காணு 
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு 
பரிசிக்கும் படியவரைக் கண்டாயானால் 
பணிந்திடுவாய் பாதத்திற் சிரசு தட்ட
கிரிசிக்கும் ஆர்நூலிற் சார்ந்தாயென்று 
கேட்கிலகத்தீசுரர் தன கிருபை யென்னே  – அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் 97 
4.சித்தர் தரிசன மந்திரம்:-

 ஓம்|சிங் ரங் அங் சிங்|

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ  ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்                 உண்டாகி நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் .


மேற்கண்ட மந்திரங்களில் எது உங்களுக்கு பிரியமானதோ அதை தேர்ந்தெடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும்.ஜெபிக்கும் போது அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் வைத்துக் கொள்ளவும்

தீராத நோய்கள் தீர ,சர்க்கரை நோய் பாதிப்புகள் குறைய,கணவன் மனைவி அன்யோன்யம் உண்டாக ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம்

ஓம் நமோ பகவதே பார்கவாய சுக்ரமுனியே |
ம்ருதசஞ்ஜீவினீம் தாபய தாபய ஸ்வாஹா |ஓம் நமஹ ||


வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர ஹோரையில் ஸ்ரீ துர்க்கை ஆலயத்தில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து வரத் தீராத நோய்கள் தீரும்.சர்க்கரை நோய் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.தம்பதிகளுக்குள் அன்யோன்யம் உண்டாகும்.செல்வநிலையில் உயர்வு உண்டாகும்.

வெண்ணிற ஆடைகள் அணிந்து ஜெபித்தால் நிறைவான பலன் கிடைக்கும்.

பலன் தரும் ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்

1.ஸ்ரீ ஹனுமத் சுலோகம் :-

அசாத்ய  சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|

எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கி வேண்டிய பின்னர் துவங்க சிறப்பாக முடியும்.
ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் முடிவடையாமல் நின்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ஹனுமன் ஆலயம் சென்று அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி அமர்ந்து இந்த ஸ்லோகத்தை  27 தடவை ஜெபித்து வேண்டிக்கொள்ள தடைபட்ட காரியம் விரைவில் முடியும் சூழல் உருவாகும்.

2.வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம் 

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||


3.எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுபட :-
  
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||

உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள மனிதர்களாலும், இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன மந்திரம் 3 தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து கொள்ளவும். 

4.பிறரால் செய்யப்பட திருஷ்டி,மந்திர யந்திரங்களால் உண்டான பாதிப்புகள் நீங்க, நோய்கள் ,பயம் நீங்க,சர்வ கார்யங்களிலும் வெற்றி பெற :   
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய |
சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய |
சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய |
சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா || 

மேற்சொன்ன பலன்கள் போக மேலும் சில காரியங்களுக்கும் இம்மந்திரம் பயன்படும்.எதிர்களுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வெற்றி கிட்டும். 

5.கெட்ட சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க :-
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா || 

அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் இருந்தால் இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும்.உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு “ஹ்ராம்” என்று எழுதி  இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச்  சுருட்டித் தாயத்துக்குள்  அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத,ப்ரேத,பிசாசு,துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு,கடை,தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு,கடை,தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்.


முதுகு வலி ,இடுப்பு வலி தீர அதர்வண வேத பரிகாரம்

ஆண்களுக்கு :-

 அதிகமான முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் அரச மரத்தின் வடக்குப் பக்கம் செல்லும் வேரில் ஒரு சிறு துண்டை வணங்கி எடுத்து ஒரு கருப்புத் துணியில் சிறிது பன்னீர் தெளித்து அதில் அந்த வேரை வைத்து முடிந்து தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்படியாக வலி குறையும்.  

ஒற்றைத்தலைவலி நீங்க மந்திரம்

இடது கையில் விபூதியை பரப்பி அதில் ஸ்ரீம் என்று எழுதி அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து மூடிக்கொண்டு
"ஓம் காளி அம் அம் கிலியும்
கிலியும் பத்திரகாளி சிவ நசி"  என்று 108 உரு செபித்து பின்பு மேற்படி விபூதியும் வெற்றிலையும் 
கசக்கி வலிக்கிற இடத்தில் போட வலி உடனே தீரும்.

விபூதி–உடல் கட்டு மந்திரம்

விபூதி–உடல் கட்டு மந்திரம், விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய்
இருந்து கொண்டு 
"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல் முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,ரீங்காளி,பிரகாசகாளி,
வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி, ஹரிகாளி,சிவகாளி 
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா. என்று 21 உரு செபித்து இவ்விபூதியை தன்னைச்சுற்றிலும் 
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும் 
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும் 
செய்ய முடியாது.

செய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வது எப்படி…

“பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி 
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை ” அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள், யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனி மந்திரத்தைக் கேள், “ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா" திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர். இத்துடன் "பாவி தானாக்கால் யேது மேன்மை" என்றும் சொல்கிறார். பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர். இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
இல்லையேல் பலிக்காது.

பஞ்சாட்சரம்

Meaning of பஞ்சாட்சரம்

நமசிவாய = ஸ்தூல பஞ்சாட்சரம்
சிவாயநம = சூட்சும பஞ்சாட்சரம்
சிவாயசிவ = கரண பஞ்சாட்சரம்
சிவாய = மகா கரண பஞ்சாட்சரம்
சி = முக்தி பஞ்சாட்சரம்

WhatsApp WhatsApp us