Year: 2018

உடல் கட்டு மந்திரம்

உடல் கட்டு மந்திரம்

விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய்
இருந்து கொண்டு 

"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல் முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,ரீங்காளி,பிரகாசகாளி,
வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி, ஹரிகாளி,சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.

என்று 21 உரு செபித்து இவ்விபூதியை தன்னைச்சுற்றிலும்
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும்
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும்
செய்ய முடியாது.

நினைத்த காரியம் வெற்றி பெற அகத்தியர் அருளிய உருத்திராட்ச மந்திரம் | காரிய சித்தி வசிய மூல மந்திரம்

நினைத்த காரியம் வெற்றி பெற அகத்தியர் அருளிய உருத்திராட்ச மந்திரம் | காரிய சித்தி வசிய மூல மந்திரம்

 

This simple method involves 108 Rudraksha Mala to be used for meditation and a simple Mantra to be recited.

 

வசிய மூல மந்திரம்:

 

“ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா”

 

Vasiya Mantra in Tamil:

 

“ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா”

 

 

 

 

 

உங்கள் உடலே உங்கள் யந்திர தகடு

உங்கள் உடலே உங்கள் யந்திர தகடு

மந்திரவாதி ஆகலாம் நீங்களும் பணக்காரர் ஆக?

அஷ்ட கர்ம மந்திரங்களில் வசிய மந்திரங்களை பயண்படுத்தி நீங்கள் எதை வேண்டுமானாலும் அடையலாம்” வரும் காலத்தில் பில்கேட்ஸ் ஆகும் உறவுகளுக்காக இந்த மந்திரத்தை உபதேசிக்கிறேன் ; இந்த மந்திரத்தை தவரான விசயங்களுக்கு பயண்படுத்தினால் பிரபஞ்சம் சட்டம் உங்களுக்கு தண்டனை தரும் !
ஓம் ஸ்ரீம் ஐய்யும் கிலியும் சவ்வும் ரீயும் ஓம் யங் ய ந ம சி வ
(உங்கள் எண்ணங்களை எழுதுங்கள் )
என் வசம் வசி வசி  சுவாஹா :

நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனாது அதற்கு மீறிய யந்திர தகடு கிடையாது . நீங்கள் அடிக்கடி உங்கள் மனதில் உச்சரிக்கும் சொல்கள் அனைத்தும் உங்கள் உடல் ஆகிய யந்திர தகடில் பதிவாகி அது? பிரபஞ்சம் மூலம் நிறைவேற்றப்படுகிறது

முதலும்முடிவும் முருகனே

முதலும்முடிவும்
முருகனே

கந்த சஷ்டி கவசம் படிப்பவரா நீங்கள்?
கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கம் !!


💥 கந்தசஷ்டி கவசத்தில் கவசம் என்றால் நம்மைத் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய ஒரு பொருள் என்று கூறலாம். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் அதீத முருக பக்தர். இவர் ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.

💥 இந்த சஷ்டி கவசத்தை தினம் இரு வேளையிலும் அதாவது காலையிலும், மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவைகளைக் குறிக்கும். நாம் அந்தத் திருவடியை விடாது படித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

💥 கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்றும் எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறார்கள்.

💥 முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும். அவர் அழகை வர்ணிக்கும் போது, பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்தின மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் முருகனை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

💥 வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல், நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்.

💥 இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிற்றுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐந்து விரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல் போன்ற பல்வேறு விதமான வேல்கள் நம்மைக் காக்கின்றன.

💥 அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சு ன்யம், பெரும் பகை, வல்லபு தம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அனைத்தும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

💥 அடுத்து, புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும், பாம்பும் செய்யான், பு ரான், ஆகியவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்றும் கூறுகிறார்.

💥 வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சு லை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் கந்த சஷ்டி கவசத்தைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். மேலும் இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

💥 பின் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் என்றும் முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்றும் அப்பாடலில் கூறப்பட்டுள்ளது. எனவே, நாள்தோறும் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றி வணங்குங்கள்!! நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் விலகி ஓடிவிடும்.

முதலும்முடிவும்
முருகனே🔥🍃🌹💫

WhatsApp WhatsApp us