Month: April 2019

ஏவல் பில்லி சூன்யம் செய்வினை வைப்பு

பொதுவாக மாந்திரிகத்தால் செய்யபடுகின்ற பில்லி சூனியத்தை பற்றி மக்கள் பல நேரங்களில் பேசுகிறார்கள் சில மந்திரவாதிகளும் அந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் அப்படி என்றால் என்ன? அதன் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. குறிப்பாக ஏவல், சூனியம் என்பதை கூட சிறிது விளங்கி கொள்ள முடிகிறது. பில்லி என்பதை பற்றி அதிகமாக புரிந்துகொள்ள முடியவில்லை எனவே அவைகளை சிறிது விளக்க முடியுமா என்று என்னிடம் கேட்கிறார்கள் அவர்களுக்கு விளக்கம் தரவேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன் அந்த கடமையே செய்து முடித்த பிறகே மாந்திரிகத்தை பற்றிய முழுமையான தகவல்களை கொடுத்தால் நன்றாக இருக்குமென்றும் கருதுகிறேன்.

பில்லி என்ற வார்த்தை வடமொழியிலோ தமிழிலோ கிடையாது இந்த வார்த்தை புத்தர் பேசிய பாலி மொழியில் உள்ளதாகும் இதற்கு நேரடியான பொருள் கட்டுபடுத்துதல் என்று சொல்லலாம் அதாவது மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டு படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரம் கற்ற ஒரு மந்திரவாதி ஒருவனை மன நோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும். ஒருவனது, செயல்களை தலைகீழாக மாற்றி தோல்விகளை மட்டுமே அவன் பெறும்படி செய்துவிடவும் முடியும். இது தான் பில்லி என்பதன் விரிவாக்கம்.
அடுத்ததாக சூன்யம் என்ற வார்த்தை வருகிறது. இது வடமொழி சொல் என்பது எல்லோருக்கும் தெரியும். சூன்யம் என்றாலே வெறுமை என்பது பொருளாகும். செல்வந்தனான ஒருவனை ஒன்றுமே இல்லாத வறியவனாக நடுத்தெருவில் நிறுத்துவதன் மந்திர பெயரே சூன்யம் என்பதாகும். இந்த சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும். அழித்து விடலாம் கைகால்களை முடக்கி விடலாம் சம்மந்த பட்டவருக்கு தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளை செலுத்தி விடலாம் கருவில் உள்ள குழந்தயை கூட கொன்றுவிடலாம்.
தனக்கு கீழே உள்ள ஒருவனை இந்த வேலையை செய் என்று சொல்வது எவலாகும். அதே போன்றது தான் மாந்திரிகத்தில் உள்ள ஏவல் முறையாகும் மந்திர சக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவி விட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய உறுப்பாகும் இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரது மூளையை முற்றிலுமாக நமது கைவசப்படுத்தி அவரை நமது ஏவலாளாக ஆக்கிவிடவும் முடியும்.
இதே போல மாந்திரிகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் என்னொரு வார்த்தை செய்வினை என்பதாகும். தனது சொந்த விருப்பத்தின் படி செயல்பட்டு கொண்டு லாபத்தையும். வெற்றிகளையும் அநுபவத்தி வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பி விட்டு கடேசியில் அவனை படுகுழியில் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும் இதன் மூலம் ஒருவனின் பொருளாதாரத்தையும் அழிக்கலாம் ஆரோக்கியத்தையும் நீர்த்து போக செய்யலாம்.
அடுத்ததாக உள்ளது வைப்பு என்பதாகும். இது மந்திர வழியிலோ மருத்து வழியியோ ஒரு பொருளை உண்ண கொடுத்து அல்லது அவர்களின் ஆடையில் உடம்பில் தடவி விட்டு அவர்களை வசிய படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும்

உடல் கட்டு மந்திரம்

உடல் கட்டு மந்திரம்:

விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய் இருந்து கொண்டு

"ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் கணுக்கால் இரண்டும் கணபதி காவல் முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் துடை இரண்டும் துர்க்கை காவல் அரை ஆதி சிவன் காவல் வயுறு வைரவன் காவல் மார்பு மார்க்கண்டேயன் காவல் கழுத்து கந்தர்வன் காவல் உதடு உத்தமாதேவி காவல் பல்லு பரசுராமன் காவல் நாவு நாராயணன்    காவல்       கண்ணுரெண்டுக்கும்   காளிங்கராயன் காவல் நெத்திக்கு நீலவர்ணன் காவல் தலைக்கு தம்பிரான் காவல் உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் என்னை கார்க்காவிட்டால் இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை கார்க்க நம சிவாய "

இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு பிறகு பூஜையில் அமரவும்.

விபூதியை தன்னைச்சுற்றிலும்

போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும்

நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும்

செய்ய முடியாது.

எந்தவொரு மந்திரம் செபிக்கும் முன்னரும் இக்கட்டு மந்திரத்தை செபித்து விபூதியை நம்மை சுற்றிப்போட்டுக்கொண்டால்

அம்மந்திரத்தை சித்தி செய்ய விடாமல் செய்யும் துஷ்டசக்திகளும்,கெட்டவர்களின் சதியும்,மற்ற எந்த இடையூறும் நீ அந்த விபூதியை விட்டு வெளியே வரும் வரை உன்னை நெருங்காது.அதற்குள் நீ சித்தி செய்ய வேண்டிய மந்திரத்தை சித்தி செய்து கொள்ளலாம். நீ அவ்விபூதியை விட்டு வெளியேரி விட்டால் அவ்விபூதியின் அற்றல் முறிந்து விடும்.

பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள…!

பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள…!
காலம் காலமாய் மாந்திரிகம் என்பது அமானுஷ்யம் நிறைந்த ஒரு கலையாகவே இருந்து வருகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில் நம்மில் பலரின் நிம்மதியையும், பொருளையும் அழிக்கும் ஒரு கலையாக இருக்கிறதென்றால் மிகையில்லை…மாந்திரிகம்என்பது அடிப்படையில் ஒரு மனிதன் தன் சக மனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அல்லது அழிப்பதாகவோதான் கருதப் படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். இது பற்றிய தகவல்களை முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.அந்த வரிசையில் இன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் பட்டதாய் கருதப் படுகிறவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள்
கோரக்கர்அருளிய"
சந்திரரேகை"
எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாகநீதியுடன் ஓம்உம்லம்சிம் நம்வம்கிலீம்ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கேதீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்திட்டமுடன் அஉஇ உள்ளே நாட்டிப்பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.-கோரக்கர்.இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்தயந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தையபதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.இப்போது  வெளிச்சம் நிரம்பிய, தூய்மையான அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு “ஓம் உம் லம் சிம் நம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே” என்ற மந்திரத்தை அந்தி, சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செபித்து வர பில்லி, சூனியம், ஏவல்போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டுநீங்கிவிடும் என்கிறார்.
WhatsApp WhatsApp us